சென்னை:
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு அதிகளவில் கடன்களை வாங்கி உள்ளதாக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.120 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில்திட்டங்களுக்கான தொகைகள் எந்தெந்த வழிகளில் செலவழிக்கப் பட்டன, முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதால் கடந்த காலத்தில் நடந்த முறைகேடுகளை திருத்தவும் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிதி நிலைமைதொடர்பான வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்து, அதன்பிறகு தமிழ்நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன். இது இணை யதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன் என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் அதிமுக அரசு அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில், வருவாய் குறைந்து விட்டதால் நிதி நிலைமை மிக மோசமாகி உள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் கூறியிருக் கிறார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போது ரூ.4.85 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடி உயரும் என்பதையும் இந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2011-16 ஆம் ஆண்டுகளில் வருமானம் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை 2016- 21 இல் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நிதி பற்றாக்குறையும் பல மடங்கு உயர்ந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.2020-21 இல் மட்டுமே வருவாய் பற்றாக்குறை ரூ.61.320 கோடியாக உள்ளது. கடந்த 5 ஆண்டில் பொது கடன் 3 லட்சம் கோடியாக உள்ளது.தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ஏற்பட்டுள்ள இழப்புகள், ஏற்கனவே வாங்கப்பட்ட கடனுக்கு தினசரி கட்டப்பட்டும் வட்டியின் விகிதம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் கடன்சுமை, இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய விதிகளை வழங்காமல் வஞ்சித்துக்கொண்டிருப்பதையும் வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அம்பலப்படுத்தி யுள்ளார்.முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளில் மாறி, மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பல மடங்கு சரிந்துவிட்டது. தமிழகத்தின் வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி நிதிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வுக்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலை சரியத் தொடங்கிவிட்டது. 2016 - 2021 ஆம் ஆண்டு காலத்தின் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தின் நிதிநிலைமை சரிந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் குறித்தும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவாக விளக்கி உள்ளார்.முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படியும் திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காகவும் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிப்புக்கு துறைச்செயலாளர்கள் பெரிதும் உத வினார்கள். மற்ற வெள்ளை அறிக்கை களை விட கூடுதல் விபரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
கடந்த பத்தாண்டு கால அதிமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை, சரியான அளவு வரி, சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று தெரிவித்துள்ளார்.