தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி...
தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதையொட்டி வியாழனன்று (டிச.11) சென்னை அயனாவரம் தாராப்பூர், லோகநாதன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டியினை 98 வது வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் டில்லிபாபு, மனோகர், மார்டின் (ஒருங்கிணைப்புக்குழு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
