tamilnadu

img

லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து தையல் சம்மேளனம் முடிவு

 லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து தையல் சம்மேளனம்  முடிவு

திருவள்ளூர், டிச.11- தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று 2026 ஜனவரி கடைசி வாரத்தில் சென்னையில் மாநிலந்தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தையல் சம்மேளன  நிர்வாகிகள் கூட்டத்தில்  முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் செவ்வா யன்று (டி 9),  திருவள்ளூர் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் சம்மேளனத்தின் மாநில தலைவர்  பி. சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மேளன பொறுப்பாளர் எம்.தனலட்சுமி சம்மேளன பொதுச் செயலாளர் எம்.ஐடா ஹெலன், பொருளாளர் மாரிக்கண்ணு, சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.ஜி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.