கோடை விடுமுறையின் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டிய முக்கிய அறிவுரைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வுகள் நிறைவடைந்தன. ஆனால், பள்ளி இறுதி வேலை நாள் 13ஆம் தேதியாக இருக்கிறது. எனவே அதுவரை கோடை விடுமுறையை செலவழிக்க இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டிய அறிவுரைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.விடுமுறை நாட்களில் தினசரி நாளிதழ்கள் வாசிக்க வேண்டும், நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் வாசிக்க வேண்டும், வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளியில் பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாது, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தக்கூடாது, நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாது, தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும் உட்பட பல அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.