tamilnadu

img

தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை - அமைச்சர்  

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மறு உத்தரவு வரும்வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனில் அனுமதி பெற வேண்டும். கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த அனுமதிக்கக்கூடாது.  

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றார்.