அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஓர் உதவி மையம் அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை பெறும் வகையிலும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எளிதில் அனுகக்கூடிய வகையிலும் உதவி மையங்கள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.