விழுப்புரம், ஜன.22- இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி, 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசி யத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்துப் பள்ளிகளிலும் தேர்தல் கல்வி அறிவுக்குழு அமைத்து, விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வரு கின்றன. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தேர்தல் கல்வி அறிவுக்குழு மாணவர்கள் சார்பில் வாக்குப்பதிவு படிவங்களை அறி தல், வாக்களிக்கும் விவரமறிந்த வாக்கா ளர் ஆகிய தலைப்புகளில், மாதிரி வாக்குப் பதிவு மையம், தேர்தல் விழிப்புணர்வு பரமபத விளையாட்டு போன்ற கண்காட்சி அமைக் கப்பட்டது. கண்காட்சியை தமிழக துணை தலைமை தேர்தல் அலுவலர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரை யாடினர். மாணவர்கள் அமைத்திருந்த மாதிரி வாக்காளர் மையம், தேர்தல் விழிப்புணர்வு பரமபத விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சி களை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கண்காட்சி களில் சிறப்பாக பதிலளித்த மாணவர்க ளுக்கும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் பி.சிங், திண்டிவனம் சாராட்சியர் எஸ்.அனு, உதவி ஆட்சியர்கள் கவிதா, சிவகிருஷ்ணமூர்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம், முதன்மைக் கல்வி அலுவலர் முனு சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் உட்பட பலர்? கலந்துகொண்டனர்.