தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தியும், 100-நாள் வேலை கூலி பாக்கியை உடனே வழங்க வேண்டியும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரியும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், கீரைப்பாளையம், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டம், மைலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட பாதிராபுலியூர், ரெட்டணை, ஆலகிராமம், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், திருவண்ணாமலை வட்டங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் மாநில, மாவட்ட, வட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.