tamilnadu

img

எல்.ஐ.சி பங்குகளை விற்பதை நிறுத்துக.... குடும்பம் குடும்பமாகப் புறப்பட்ட எதிர்ப்பு

சென்னை:
சுயசார்பு பொருளாதாரத்திற்கு நல்ல அடையாளமாகத் திகழும் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு பலிகொடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஒருபக்கம் சுயசார்பு இந்தியா என்று பேசிக்கொண்டே ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் சீர்குலைத்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை திட்டமிட்டுச் சிதைத்துதனியாருக்கு ஆதரவாக அரசேசெயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது, நவீன தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்குத் தடைபோடுவது, போதியநிதியுதவி அளிக்க மறுப்பது என பலவகைகளில் சீர்குலைவு நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக எல்.ஐ.சி., பாரத்பெட்ரோலிய நிறுவனம் என பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம்நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி-யில் இருந்து அரசின் பங்குகளை குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடமும் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத் திற்கு எல்.ஐ.சி அளித்துள்ள பங்கு அளப்பரியது. வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டு 1956ல் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5கோடி புது பாலிசிகளை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.  நமது நாட்டில்உள்ள  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டால், எந்த காலத்திலும் சரிவை சந்திக்காத நிறுவனமாக இருப்பது எல்.ஐ.சி மட்டும்தான்.

அப்படி இருக்கும் போதுஇந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை விற்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது.  எல்.ஐ.சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்குத் தந்த தொகை ரூ.2,611 கோடி. 12ஆவதுஐந்தாண்டு (2012 -17) திட்டத்திற்குஎல்.ஐ.சி-யின் பங்களிப்பு ரூ.14.23 லட்சம் கோடி. சராசரியாக ஆண்டிற்கு ரூ.2,84,000 கோடி. 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்கு தந்திருப்பது ரூ.7,01,483 கோடி. ஆண்டு சராசரி பங்களிப்பு ரூ.3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி. ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடுசெய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி. அரசின் பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் பொய்த்துப் போகிற சூழலில் கூட எல்.ஐ.சி மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு மட்டும் பொய்த்ததே இல்லை. நிர்வாகத் திறமைக்கு இதைவிடச் சான்று என்னவாக இருக்கமுடியும்? இந்திய பொருளா தாரத்திற்கு எல்.ஐ.சி ஓர் அமுதசுரபியாக திகழ்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் தற்போதைய நிலையில் எல்.ஐ.சி வழங்கும்போது, ஏன் அதை தனியாரிடம் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை அரசு குலைக்கவேண்டும்? என்று அதன் ஊழியர்களும் நாட்டு நலனில் அக்கறையுடன் செயல்படும்  தொழிற்சங்கங் களும் கேட்கின்றன. நாடு எல்லாத்துறையிலும்  தற்சார்புஅடையவேண்டும் என்று எல்லாக் கூட்டத்திலும் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் பிரதமர். ஆனால் ஏற்கனவே  தற்சார்பு அடைந்துவிட்ட ஒரு  நிறுவனத்தை தனியார்மயமாக்க முனைவதற்கு அரசு துடிப்பது ஏன் என்றும் அதன் ஊழியர்கள் கேட்கிறார்கள்.

எதிர்ப்பு 
எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் ஊழியர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.  செப். 1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனியார்மயத்திற்கு எதிரானபிரச்சாரத்தை முன்னெடுத்துள் ளனர். இதன் ஒரு பகுதியாக விடுமுறை நாளான ஞாயிறன்று எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எல்.ஐ.சி நிறுவனத்தை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக பாது காக்கக்கோரியும் குடும்பம் குடும்பமாக, அதற்குரிய வாசகத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.இல்லங்கள் தோறும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் உற்சா கமாகக் கலந்துகொண்டனர்.  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க டிவிஷன் ஒன்று எடுத்த இந்த முன்முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதேபோன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. 
நாட்டின் ஏனைய பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.