1 ஆம் பக்கத் தொடர்ச்சி...
முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
3. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில் நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப் படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும்செயல்பட அனுமதிக்கப்படாது.
4. இந்நேர்வில், தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்புகுழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியைசார்ந்த பொதுமக்கள்/ சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு, ஆக்சிஜன் தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.
5. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.