tamilnadu

img

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

சென்னை:
கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் தேர்வு நடைபெறாத மாணவர் களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வந்துவிட்டதை தொடர்ந்து பள்ளி சேர்க்கை பணிகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்திலும் 1,6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள்  தொடங்கியுள்ளன. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க் கைக்கு குழந்தைகள் வராவிட்டாலும் பெற்றோர்களிடம் போதிய ஆவணங் களை பெற்றுக் கொண்டு மாணவர்களை சேர்த்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நிறையே பேர் அட்மிசனுக்கு வந்தால் காலையில் 20 பேர் மாலையில் 20 பேர் என பிரித்து சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேர்க்கையின் போதே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவற்றை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.