tamilnadu

img

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை....

சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 2017, 18 மற்றும் 19 ஆம் ஆண்டுக ளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித் தல் சலுகை  வழங்கப் பட்டுள்ளது.இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசு வெளியிட்டுள்ள அரசாணை 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.8.2021 -க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.8.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள் ளார்.