பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா விதியை மீறிவெளியே சென்றது உண்மையே என்றுவிசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாமற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலாவிற்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று பார்த்தார். அங்கு சசிகலாவுக்கு தனி சமையலறை அமைத்து கொடுத்திருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சசிகலாவுக்கு சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதும் அதிகாரி ரூபாவின் கவனத்திற்கு வந்தது.இதுதொடர்பாக அதிகாரி ரூபா, ஒரு அறிக்கையை தயாரித்து கடந்த 12 ஆம் தேதி சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதில் சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை,தொலைக்காட்சிப்பெட்டி, தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும். சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்றிருந்தது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.இந்த விசாரணைக்குழு அறிக்கையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதியைமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என்றும் சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.