சென்னை,மார்ச்.04- கிளாம்பாக்கம் வரை மட்டுமே தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
சென்னைக்குத் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் வரை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது இதனால் தினமும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் எனப் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.