சென்னை, ஏப்ரல் 26 பொறியியல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முன்னணியில் உள்ள விலே நிறுவனம், பொறியியல் துறை மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சியினை அளிக்க உள்ளது.இதற்காக விலே நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை அது துவக்கியுள்ளது. விலே புத்தாக்க ஆலோசனைகவுன்சில் சார்பில் உருவாக்கப்பட்ட பொறியியல் கல்வித் திட்டத்தை இந்த அமைப்பு கற்றுக் கொடுக்கிறது. இந்த அமைப்பு இருவிதமான பயிற்சிகளை வழங்குகிறது. ஒன்று பொறியியல் பயிலும் மாணவர்களுக்கானது. மற்றொன்று பொறியியல் துறையில் பணியாற்றுவோருக்கானது. இந்தப் பயிற்சியில் சேர மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருந்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சிகளில் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான மூன்று மாத பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அவர்கள் தங்களின் இறுதியாண்டு பயிற்சித் திட்டத்தை முடிக்க உதவிகரமாக இருக்கும் என்று விலே இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குநர் விகாஷ் குப்தா கூறினார்.விலே அமைப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் பணியை செய்து வருகிறது. குறிப்பாக, இங்கு இயந்திரவழிக் கற்றல் மற்றும் டேட்டா இன்ஜினியரிங்கை கற்றுக்கொடுக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.