tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களின் வார விடுப்பு பறிப்பு குடும்பத்துடன் முற்றுகை

சென்னை, டிச. 4- போக்குவரத்து நிர்வாகம் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து, திட்டமிட்டு வார விடுமுறை பறிக்கப்படுவதை கண்டித்து சென்னை பல்லவன் இல்லத்தை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சனிக்கிழமையன்று (டிச. 4) முற்றுகை யிட்டனர். சம்மேளனத் தலைவர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர்  எம்.சந்திரன், ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை,  பொருளாளர் பாலாஜி, இடைக்கமிட்டி செயலா ளர்கள் ஐ.கே.மணி, செந்தில்குமார், நிர்வாகி சிவா உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது குறித்து பொதுச்செயலாளர் வி.தயானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னை மாநகர் போக்கு வரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப வல்லு நர்கள் என 21 ஆயிரம் தொழி லாளர்கள் பணிபுரிகிறார்கள்.

இவர்க ளுக்கு தொழிலாளர் நலச் சட்டப்படி வாரத்தில் ஒரு நாள் வார ஓய்வு வழங்க வேண்டும்.  இந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த விடுப்பு விதிகளை மாற்றி புதிய விடுப்பு விதிமுறைகளை உருவாக்கி 2021 ஜனவரி மாதம் முதல் வார  ஓய்வு மறுக்கப்படுகிறது. வார ஓய்வு மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சொந்த விடுப்பை எடுத்துக் கொண்டு சம்பளம் வழங்கப்படுகிறது. விடுப்பு  இருப்பு இல்லை என்றால் சம்பளம்  இல்லா விடுப்பாக பாவிக்கப்படு கிறது. இதனால் மாதந்தோறும் நூற் றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வார ஓய்வு மறுக்கப்பட்டு சம்பளத்தில் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திட மும் தொழிலாளர் நலத்துறையிடடும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய விடுப்புகளை ரத்து செய்து, சட்டப்படி கட்டாயம் வார ஓய்வு வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நிர்வாக இயக்கு நர் அன்பு ஆபிரகாம் சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, கட்டயம் வார விடு முறை வழங்கப்படும் என்றும் பிற  கோரிக்கைகள் குறித்து வரும் செவ்வாயன்று (டிச. 7) பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் உறுதியளித்துள்ளார்.