tamilnadu

img

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைத்திடுக... இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அளிக்கப் பட்டுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுகமிட்டி அமைக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான புகார்கள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து இதுபோன்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம்உள்ளன.  சென்னையில் பிரபல தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீதும் பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசின்ஜிஎஸ்டி வரி கண்காணிப் பாளராக பணியாற்றி வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நிகழ்ந்த  பாலியல் தொந்தரவு குறித்தும் தமிழ்நாடு குழந்தைகள் -பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கனவுகளோடு எதிர்காலத்தை  மனதில் கொண்டு  படிக்க வரக்கூடிய மாணவிகளிடம் இவ்வாறு பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக் கை எடுக்க வேண்டும். 

விசாகா கமிட்டி வழி காட்டுதல்படி  மாணவிகள் மீதான குற்றங்கள் தடுக்கப்பட நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும்.இணைய வழியில் மட்டுமின்றி இயல்பான பள்ளி வேலை நாட்களிலும் இது போன்ற குற்றங்கள் நடந்துள்ளது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வியில் இதுபோன்ற துர்நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மை யோடு கடும் தண்டனையின் விவரங்களோடு பத்திரிகை களில் செய்தியாக்கப்பட வேண்டும்.  இதுபோன்ற தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படக் கூடிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசேஏற்று நடத்த வேண்டும். 

பாலியல் புகார்களில் குற்றம் சாட்டப்பட்டிருக்கக் கூடிய நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.உடனடியாக தமிழக அரசு, பெற்றோர்கள், மாண வர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் இயக்கங்கள், காவல்துறை, வழக்கறி ஞர்கள், மாதர் அமைப்பு மற் றும் சமூக நலத்துறை உறுப்பினர்கள் உள்ளடக்கிய விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆன்லைன் வகுப்பில்ஆசிரியர், மாணவர்களுக் கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.ஆன்லைன் வகுப்பு மற்றும் தற்போது வெளிவரும் பல்வேறு பாலியல் குற்றங்களை புகார் செய்ய மாநில அளவில் கூடுதலாக தனி இணையதள முகவரி,தொலைபேசி எண் போன்ற வை உருவாக்கப்பட்டு அதைஅனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட வர்களின், புகார்தாரர் களின்  தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.