முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம் சாட்டி உள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா பகுதிக்கு சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
பிப்ரவரி 22-ம் தேதி தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியிடமும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும் நேரில் இந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகாரளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.