பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது மாவட்ட மகளிரணி நிர்வாகி பாலியல் புகார் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்;
கடந்த 2018 முதல் பலமுறை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து 2022இல் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கையும் இல்லை.
தற்போது கரு.நாகராஜன் அவர் சொல்வதை கேக்காவிட்டால் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன், பலபேரை இப்படி செய்திருக்கிறேன் என என்னை மிரட்டுகிறார். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
