சென்னை:
போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் பள்ளி-கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்றால் கடும் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை(ஆக.31) காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது கேள்வி நேரத்தின் போது தனது துறை சார்ந்த கேள்வி ஒன்றுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளது நிகழ்ந்து ள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது இல்லை. தற்போது, கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. 16வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார்.தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை அரசு தடுக்குமா? என பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விஎழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரைக்கும் 10, 673 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். 11,247 பேரை கைது செய்து, 15 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளோம். தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என்று கூறினார்.மெரினா கடற்கரை, மக்கள் கூடும் இடங்கள், பள்ளி-கல்லூரிகள் முன்பு விற்பனை செய்வது குறித்து எழுப்பிய மற்றொரு கேள்விக்கும் பதில் அளித்த முதலமைச்சர், “ஏற்கெனவே உள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பள்ளி-கல்லூரிக ளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கஅந்தச் சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வந்து உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்போம் என்றும் தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. அதைப் பரிசீலித்து உரிய நேரத்தில் வழங்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.