சென்னை:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தேர்தல் திருத்தணியில் ஞாயிறன்று (ஆக. 22) நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர், துணைத் தேர்தல் ஆணையராக முன்னாள் மாநில துணைத் தலைவர் டி.வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.
இதில் புதிய மாநிலத் தலைவராக மூ.மணிமேகலை (திருநெல்வேலி), பொதுச்செயலாளராக ச.மயில் (தூத்துக்குடி), மாநிலப் பொருளாளராக ஜெ.மேத்யூ (செங்கல்பட்டு), துணைப் பொதுச்செயலாளராக தா.கணேசன் (திண்டுக்கல்), இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினராக தோ.ஜாண் கிறிஸ்துராஜ் (திருப்பூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், மாநிலத் துணைத் தலைவர்களாக சேவியர் (கன்னியாகுமரி), ஆரோக்கியராஜ் (சிவகங்கை), எம்.கே.முருகன் (திண்டுக்கல்), ரவிச்சந்திரன் (தஞ்சாவூர்), அருள் சுந்தர ரூபன் (ஈரோடு), அ.ரஹீம் (கள்ளக்குறிச்சி), ரஞ்சன் தயாள தாஸ் (வேலூர்), பெ.அலோசியஸ் துரைராஜ் (செங்கல்பட்டு), அமுதவல்லி (ராணிப்பேட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநிலச் செயலாளர்களாக பிரம்மநாயகம் (திருநெல்வேலி), தே.முருகன் (மதுரை), சகிலா (கரூர்), வீரமணி (திருவாரூர்), சுனில்குமார் (நீலகிரி), கிறிஸ்டோபர் (கடலூர்), டேவிட் ராஜன் (திருவண்ணாமலை), கிருஷ்ணன் (திருவள்ளூர்), சி.ஜி. பிரசன்னா (திருவள்ளூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தலில் மாநிலம் முழுவதுமிருந்து மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.