சென்னை,மார்ச்.20- மாற்றுத்திறனாளி பணியிடங்களுக்கான தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்பச் சிறப்புத் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் தகவல் அளித்துள்ளார்.