கடலூர், ஜூலை 2- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ் நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலா ளர் சங்கம் சார்பில் கடலூரில் 72 மணிநேர உண்ணாநிலைப் போராட்டம் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் அருகே துவங்கியது. பிஎஸ்என்எல் நிர்வாகத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 4 மாத ஊதிய பாக்கியை வழங்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு மாவட்ட உதவிச் செய லாளர் எஸ்.பழனி தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.விஜய் ஆனந்த், பிஎஸ்என்எல் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.செல்வம், என்.சுந்தரம், பி.கிருஷ்ணன், ஆர்.வி.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.