சென்னை:
பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக பள்ளிக் கல்வியில் பதினோராம் வகுப்பு 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பதினோராம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து பள்ளிகளில் நடைபெறும் பருவத்தேர்வுகள், வருகைப்பதிவு, வகுப்பறை செயல் பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது.இந்தச் சூழலில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால் 12ஆம் வகுப்பு தவிர்த்து இதர வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வீட்டுப்பள்ளி திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கணக்கீட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்தச சிக்கல் முடிவுக்கு வந்துள் ளது. மதிப்பெண் வழங்க புதிய வழிமுறைகளை அரசு வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப் பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.