சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் தலைசிறந்த கல்வியாளருமான மு. அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ். சுப்பிரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காகவும் சம கற்றல் வாய்ப்புகளுக்காவும் தன் வாழ் முழுவதும் பாடுபட்டார்.தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்தது, தொழில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு ஒழிப்பு ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மகத்தானது.அதேபோல் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது, தனது பார்வையை காத்திரமாக முன் வைத்தார். கல்வி சமூக உடைமையாக இருக்க வேண்டும், அதை நோக்கிய மக்கள் நல அரசு பயணிக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார்.அரசியல் சாசன விழுமியங்களுக்கு ஏற்ப நம் நாட்டின் கல்வி நிறுவனங்கள் மதசார்பற்ற மாண்பை கறாராக பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இவரது இழப்பு பேரிழப்பு, அண்ணாருக்கு அறிவியல் இயக்கத்தின் ஆழ்ந்த அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும் பத்தினருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.