tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15,000 நிவாரணம்

அனைத்து சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்

சென்னை, மே 20 - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊர டங்கு நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டோ தொழிற்  சங்க கூட்டமைப்பு கூட்டம் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பாலசுப்பிர மணியம் தலைமையில் புத னன்று (மே 20) நடைபெற்றது. இத னையொட்டி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றை மத்திய  அரசு பேரிடர் காலமாக அறி வித்துள்ளது. தமிழகத்தில் பிறப் பிக்கப்பட்ட ஊரடங்கு 56 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கி குடும்பம் பட்டினி  கிடக்கும் அவலநிலை உரு வாகி உள்ளது. ஆட்டோ ஓட்டினால்  தான் வருமானம். அந்த வருமா னத்தில்தான்  வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களை பூர்த்தி செய்து கொண்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஒரு பேரிடி யாக மாறியுள்ளது.

தமிழக அரசு நலவாரியத்தல் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டு நர்களுக்கு மட்டுமே நிவாரணம் அறி வித்தது. அந்த நிவாரணம் போது மானதாக இல்லை. இருப்பினும், வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கூட முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுனர்களை உள்ள டக்கி தமிழகத்தில் 3 லட்சம் ஓட்டு னர்கள் உள்ளனர். ஆனால், நல வாரியத்தில் 24 ஆயிரத்து 600 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர்  வாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள னர். எனவே வாரியத்தில் பதிவு  செய்யாத ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கும், புதுப்பிக்க தவறியவர்க ளுக்கும் வாய்ப்பளித்து, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், தலா 15 ஆயிரம் ரூபாயை கொரோனா பேரிடர் கால நிவாரண மாக வழங்க வேண்டும். நலவாரி யத்தில் பதிவு செய்யாத முடிதி ருத்தும் தொழிலாளர்களுக்கு நிவா ரணம் வழங்குவதைப் போல், பொது வில்லை பெற்றுள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவார ணம் வழங்க வேண்டும்.  2020 மார்ச் 1 முதல் தகுதிச் சான்று (எப்சி) புதுப்பிக்கப்பட வேண்டிய ஆட்டோக்களுக்கு 2021   பிப்ரவரி வரை ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். அனுமதி  உரிமம் (பெர்மிட்), சாலை வரி செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முடியாமல் போன,  பொதுவில்லை பெற்றுள்ள அனைத்து ஓட்டுனர்களுக்கும் கட்டணமின்றி ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். ஆட்டோவுக்கான வாகன காப்பீடு காலாவதியாகியிருப்பின், இந்த ஆண்டு முழுவதும் சிறைபிடிப்பது, அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.  ஊரடங்கு காலத்தில் சிறை பிடிக்கப்பட்ட ஆட்டோக்களை அபராதம் இன்றி உடனடியாக விடு விக்க வேண்டும். ஆட்டோக்களை இயக்கிட அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து விளக்கிட முதலமைச்சர் நேரம் ஒதுக்கி சந்திக்க அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக முதலமைச்ச ருக்கும், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும் கூட்ட மைப்பு சார்பில கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.