tamilnadu

ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

சென்னை:
ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மாற்றுதிறனாளிகளின் நலன் கருதி 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலாரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத் தரவிட்டுள்ளார். இதனை மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசும் ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இந்த காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங் களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்தியும் வருகிறது.  ஊரடங்கு காலத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில்  மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட் சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கும் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், “கடந்த மூன்று மாதங்களாக மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்கள் மற்றும் தொடர் தலையீடுகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.அதே நேரத்தில், தொழில் முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை, உணவு மற்றும் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக கடன்களை வாங்கி காலத்தைக் கழிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊரடங்கு காலத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம்ரூ.5000 வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், இது எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் ரூ.3,016, ஆந்திரா ரூ.2,500, கேரளா ரூ.1,300, புதுச்சேரி  குறைந்தபட்சம ரூ.1,500 முதல் ரூ.3,300 என  அண்டை மாநிலங்களில் மாதாந் திர உதவித்தொகை கூடுதலாகவும், கூடுதல் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருவதையும், தமிழகத்தில் ஒரு சில பிரிவினரை தவிர மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 அதுவும் சுமார் மூன்றில் ஒரு பங்கு பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கி வருவதையும் முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 கடந்த மூன்று மாத இழப்பீடு மாற்றுத்திறனாளிகளின் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு ரூ.5000 கணக்கிட்டு வழங்கவும், எதிர்வரும் ஒவ் வொரு மாதமும் ஒரு குறைந்தபட்ச தொகையை அல்லல்படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க வழங்க வேண்டுமென மாற்றுத்திறனுடையோர் சங்கங் களின் கூட்டு இயக்கம் சார்பில் தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.