tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெறுக

பள்ளி மாணவர்கள் வலியுறுத்தல்

சென்னை, நவ. 25 - 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில், பள்ளி மாணவர் கோரிக்கை மாநாடு சனிக்கிழமையன்று (நவ.23)கிண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பள்ளி மாணவர்க ளுக்கு முறையாக லேப்டாப், பேக், சீருடை மற்றும் மிதிவண்டி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், வட சென்னை மாவட்டச் செயலா ளர் இசக்கி, தென்சென்னை மாவட்ட செயலாளர் தீ. சந்துரு உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் 15 பேர் கொண்ட ஒருங்கிணை ப்புக் குழுவின் ஒருங்கிணை ப்பாளராக சுர்ஜித் தேர்வு செய்யப்பட்டார்.