tamilnadu

img

மருத்துவர்களுக்கு சூழற்சி முறையில் ஓய்வு!

சென்னை, மார்ச் 26- கொரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில், ஒரு வாரம் வரை,  அவரவர் வீடுகளில் மருத்துவ கண்காணிப்  பில் தங்கி கொள்ள, அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள பல்  வேறு துறையில் 9 பேர் பணியில் இருந்தால்,  சுழற்சி அடிப்படையில் அதில் 3 பேர் ஓய்வு  எடுக்க உத்தரவிட்டுள்ள மருத்துவ கல்வி  இயக்குநரகம்,  ஓய்வின் போது, மருத்து வர்கள் வெளியில் செல்லக் கூடாது என்றும்,  அவசர காலம் ஏதேனும் நேர்ந்தால், உத்த ரவை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்பும்  வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்த ரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.                      

தங்கும் வசதி தேவை...
கொரோனா தனிமை வார்டுகளில் பணி யாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோரை தினமும் வீடு சென்று திரும்ப அனுமதிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது  தொடர்பான சுற்றறிக்கையில் தனிமை  வார்டுகளில் மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்களை ஒரு  குழுவாக 4 முதல் 7 நாட்களுக்கு தொடர்ச்சி யாக பணியாற்றும் வகையில் நியமிக்க அறிவுறுத்தியுள்ளது. அவர்களை தினமும் வீட்டுக்கு சென்று வர அனுமதித்தால், அவர்களது குடும்பத்தி னருக்கும், சமூகத்தில் பிறருக்கும் பரவ  வாய்ப்பு உள்ளதால் அவ்வாறு அனு மதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு தங்கும் விடுதிகளையோ மருத்துவமனைக்குள்ளேயே தங்குமி டங்களையோ ஏற்பாடு செய்யவும், அங்கு  கண்டிப்பாக சுத்தப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. முந்தைய குழுவின் 4 முதல் 7 நாட்கள் பணிக்காலம் முடியும் நேரத்தில் அடுத்த குழுவை தயாராக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.