tamilnadu

img

தனியார்துறையில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாடு கோரிக்கை

சென்னை, மார்ச் 1 - மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டு மென்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டக்குழு அமைப்பு மாநாடு ஞாயிறன்று (மார்ச்.1) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. மனநலம் பாதிக்கப்பட்டோர், கடும் ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கு கிறது. இதனை 3 ஆயிரம் ரூபாயாகவும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாநாட்டிற்கு டி. சுரேந்திரன் தலைமை தாங்கினார். என். மனோகரன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத்தலைவர் கே.பி. பாபு பேசினார். அறிக்கையை எஸ்.மனோன்மணி சமர்ப்பித்தார். வட சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி நிறைவுரையாற்றினார். எம். சதாசிவம் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக டி. சுரேந்திர னும்,செயலாளராக எஸ். மனோன்மணி யும், பொருளாளராக என். மனோகர னும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.