districts

img

அரசு கட்டிடங்களில் கழிப்பிட வசதி மாற்றுத்திறனாளிகள் மாநாடு கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 17 - காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 4ஆவது மாநாடு ஜூலை 16, 17 தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தனி அடை யாள அட்டை வழங்கி, 4 மணி நேர வேலை யுடன் முழு சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளி களுக்கு பசுமை வீடு, பிரதமர் வீடு திட்டத் தில் அரசு முன்னுரிமை வழங்க வேண் டும், மாவட்டத்தில் படித்து முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அம லாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வி.முனு சாமி தலைமை தாங்கனர். சங்க கொடியை என்.அன்பழகன் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை எம்.டில்லிபாபு வாசித்தார். வி.அரிகிருஷ்ணன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணைச் செயலாளர் கே.பி.பாபு பேசினார். மாவட்ட செயலாளர் வி.ஏழுமலை வேலை அறிக்கையும், பொருளாளர் பி.பி.பாலாஜி, வரவு-செலவு அறிக்கையும் சமர்பித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகா லட்சுமி யுவராஜ், சிஐடியு மாநிலச் செய லாளர் இ.முத்துக்குமார், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் வி.கணேசன், தமுஎகச மாவட்டச் செய லாளர் கு.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசி னர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா பேசினார். காஞ்சிபுரம் நகரச் செயலாளர் ஆர்.ஓம்குமார் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.பி.பாலாஜி, செயலாளராக வி.முனுசாமி, பொருளாளராக வி.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பேரணி
மாநாட்டிற்கு முன்னதாக கோரிக்கை பேரணியை சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கே.பி. பாபு துவக்கி வைத்தார். வணிகர் வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதிஅண்ணா பேசினார். காஞ்சி ஒன்றிய தலைவர் ஆர்.மணிகண்டன் நன்றி கூறினார்.