சென்னை
தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு பிறகும் விடுவிக்காமல் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தான் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.இந்நிலையில் புதனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.