tamilnadu

img

டாடா மேஜிக் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

புதுச்சேரி, ஜுன் 7- புதுச்சேரியில் டாடா மேஜிக் ஓட்டுநர்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி வில்லியனூரில் டாடாமேஜிக் ஓட்டுநர் கோபிநாத் மீது தாக்குதல் நடத்திய  சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். டாடாமேஜிக் வாகன ஓட்டுநர்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.  உரிய அனுமதி இல்லாமல் வில்லியனூர் பத்து கன்னு வழிதடத்தில் இயங்கும் தனியார் பேருந்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. வில்லியனூர் ஏழைமாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு தனியார்  போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.  சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன், செயலாளர் சீனுவாசன், இணைச் செய லாளர் பிரபுராஜ், சிபிஎம் வில்லியனூர் கொம்யூன் செயலாளர் ஐயப்பன், சங்கத் தலைவர் மது, நிர்வாகிகள் கனகராஜ், சுந்த ராஜ், முருகன் உள்ளிட்ட திரளான ஓட்டு நர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.  போராட்ட இறுதியில் வில்லியனூர் காவல்துறை கண்காணிப்பாளர் ரங்க நாதனை சந்தித்து  டாடாமேஜிக் ஓட்டுநர்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், விதி முறை மீறி இயங்கும் தனியார் பேரூந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.