tamilnadu

img

கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை …

கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை …

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சிபிஎஸ் ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி ஓய்வூதியர் சங்க தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.புருஷோத்தமன், மாநில இணை செயலாளர் தண்டபாணி மற்றும் பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் சிவராமன், கலியமூர்த்தி, மனோகரன்,  ராமதாஸ், பத்மநாபன், நடராஜன்,  குழந்தை வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.