சென்னை:
தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சேவை நோக் கில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்துக் கழகங்கள் இனி லாபம் நோக்கத்தை மட்டுமே குறிக் கோளாக கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு சொல்லப்படும் காரணம் செலவு, கடன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை போன்ற கூடுதல் நிதிச் சுமை அரசுக்கு கூடிக்கொண்டே இருக்கும் நிலையில் மாநில போக்குவரத்துக் கழகம் எந்தவொரு தனியார் வாகனத்திற்கும் வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து அதை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்.இதற்கு வழிவகை செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் 288ஏ என்ற பிரிவை திருத்தம் கொண்டு வருவதற்கான வரைவு அறிவிப்பாணையை கடந்த ஜனவரி 9-ஆம் தேதியன்று அரசு வெளியிட்டது.வாடகைக்கு எடுக்கும் வாகனங்களுக்கு எஸ்.சி.பி.ஏ. விண் ணப்பத்தின் மூலம் பெர்மிட் வழங்கப்படுகிறது. இதுசம்பந்தமான வரைவு அறிவிப்பாணை கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் எந்தவொரு கருத்தும் ஆட்சேபனையும் பொறப்படாததால் வரைவு அறிவிப்பாணையை உறுதி செய்து புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வந்து தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் உத்தரவு பிறப்பித் துள்ளார். அதன்படி, மாநில போக்குவரத்து கழகங்களால் தேசிய மயமாக்கப்பட்ட வழித் தடங்களில் சொந்தமாக இயக்குவதற்காக, சொந்தமாக வாகனங் களை வாங்க முடியாத அவசர சூழ்நிலை எழும்போது, அந்த போக்குவரத்துக் கழகம் எந்தவொரு தனியார் வாகனத்தையும் வாடகைக் கட்டணத்தில் எடுத்து, உரிமம் பெற்று இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ரயில்வே துறையில் படிப்படியாக தனியார் மயத்தை புகுத்திய மோடி தலைமையிலான மத்திய அரசு, தனியார் ரயில்களை இயக் கவும் பராமரிக்கவும் அனுமதியை தாராளமாய் வழங்கியது.மத்திய அரசின் அடிமையான தமிழக அரசு, தனது பங்கிற்கு அரசு போக்குவரத்துக் கழகங் களை சீர்குலைத்து பேருந்து உற் பத்தியை அடியோடு ஒழித்துக் கட்டி தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் பணியை சத்தமில்லாமல் செய்து முடித் துள்ளது.