செண்பகராமன் தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி ஆவார்.
சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் “ ஏற்படுத்தி ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கமிட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை எழுப்பினார்.‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றிப்பல சொற்பொழிவுகள் ஆற்றினார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர்ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார்.1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்துஜெர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்கவைக்க செருமானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். ‘எம்டன்’ என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில்செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். இந்தியரை தாழ்த்திப் பேசிய ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.இதனால் செண்பகராமனை, நாஜிகள் வெறுத்தனர். நாஜிகள் உணவில் விஷம் வைத்தது மற்றுமின்றி அவரை தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது.
பெரணமல்லூர் சேகரன்