tamilnadu

img

‘ரெம்டெசிவிர்’ உயிர் காக்கும் மருந்து அல்ல....

சென்னை:
ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து இல்லை. இதை மருத்துவர்கள், நோயாளிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலைதீவிரமடைந்துள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றுக்கு ரெம்டெசிவிர்  என்ற மருந்து பயனளிப்பதாகக் கூறி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர்.இது தொடர்பாக பொது சுகாதாரத் துறைஇயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது: 

உலக சுகாதார நிறுவனம், ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காப்பாற்றக் கூடியது இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு இந்த மருந்தைப் பரிந்துரைக்கவும் இல்லை.அதேசமயம், ரெம்டெசிவிர் மருந்து ஆன்டி வைரல் மருந்தாகும். இதை எடுத்துக்கொள்வதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைபெறும் காலம் மட்டுமே குறையும். எனவே, அனைவருக்கும் ரெம்டேசிவிர் மருந்து தேவைப்படாது.தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் ரெம்டெசிவிர் மருந்து இல்லை என்றால், அதை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டாம். எனினும், அவசியத் தேவை ஏற்பட்டால், மருத்துவமனைகள் வாயிலாக தமிழக மருத்துவப் பணிகள் கழகத்தை தொடர்புகொண்டு, நோயாளியின் விவரத்தை அளிக்கும்பட்சத்தில் ஒரு டோஸ் மருந்து ரூ.783-க்கு வழங்கப்படும்.எனவே, பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்கு அலைய வேண்டாம். மருத்துவர்களும், ரெம்டெசிவிர் மருந்து குறித்து நோயாளிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.