சென்னை:
லட்சுமி விலாஸ் வங்கியின் ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது ஒரு நாள் சம்பளம் ரூ. 68 லட்சத்தை வழங்கியுள்ளனர்.இவ் வங்கியின் 4,000-க்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு ரூ. 24 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.44 லட்சமும் தங்களது பங்களிப்பாக வழங்கியிருக்கின்றனர். இந்த பங்களிப்பு, கொரோனா தொற்றுக்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த போராட்டமாகவும், வைரஸ் பரவலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.