tamilnadu

img

விசாரணையின்றி 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்க... தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சென்னை:
அரசியலமைப்புச் சட்டத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபடும் மத்திய பாஜக அரசின்செயல்பாடுகளை கண்டித்து சனிக்கிழமையன்று (செப்.5) மாநில முழுவதும் தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஷ்மீரில் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறைகளிலும், வீட்டுசிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அம்மாநிலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்கவேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் கல்வி உரிமையை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தமிழக சிறைகளில் தண்டனை காலம் முடிந்தும், விசாரணையின்றியும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளமுஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.மத்திய சென்னை மாவட்டம் துறைமுகப் பகுதியில் நடைபெற்ற போராட்டத் தில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிஷ்ணன் பேசினார்.