tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் பதிவு - போராட்டத்திர்கு கிடைத்த வெற்றி!

சென்னை,ஜனவரி.27- சாம்சங் தொழிலாளர் சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணிபுரியும் 2000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சம வேலை, சம ஊதியம், அடிப்படைத் தேவைகள் மற்றும் சிஐடியு சங்கத்தைப் பதிவு செய்யக்கோரி 37 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சிஐடியு சங்கத்தை பதிவு செய்து கொடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 26ஆம் தேதிக்குள் சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) முறையாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.