tamilnadu

img

கற்றல் இடைவெளியை குறைக்க ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 13 - கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 1-3ஆம்  வகுப்பு வரையிலான குழந்தைக ளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’  எனும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்ட தொடக்க விழா  திங்களன்று (ஜூன் 13) சென்னைக்கு அருகே அழிஞ்சி வாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடை பெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு: ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குழந்தைகளின் கல்வி,  அறிவு தாகத்தை தீர்க்கக் கூடிய வகையில் தொடங்கப் பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. அதனால் வகுப்பறையில் நேரடியாக கற்கும் வாய்ப்பை குழந்தை கள் இழந்தனர். இதனால் கற்றலில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதை குறைக்க வும், குழந்தைகளின் கற்கும் ஆற்றலை அதிகப்படுத்தவும் ‘எண்ணும் எழுத்தும்’ எனும்  இந்த திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்க ளின் கருத்துக்களை அடிப்படை யாக வைத்து, குழந்தைகள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி; உயர்கல்வி என்பதே அரசின் லட்சியம். குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி முறையாக கிடைத்துவிட்டால், அதன் பிறகு நடப்பது அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிய வேண்டும் என்பது திட்டத்தின் இலக்கு. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் 1, 2, 3  ஆகிய மூன்று வகுப்புகளில் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று  பாடங்களுக்குப் பயிற்சி  நூல்கள் உருவாக்கப்பட் டுள்ளது. தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டு மொழி வழி யாகவும் நூல்கள் தயாரிக்கப் பட்டுள்ளது. பாடமாக மட்டுமின்றி, எளிய  செயல்பாட்டு வடிவத்திலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப் பட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ எனும் செயலி உரு வாக்கப்பட்டுள்ளது. ஆடல்,  பாடல், கதையாகச் சொல்லு தல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருள்கள் எனப் பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இதற்கான காணொளிகளும் வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக 2025-ஆம் ஆண்டுக் குள் இலக்கை நிச்சயம் அடைவோம்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ரீடிங்  மாரத்தான்’ என்கிற தொடர் வாசிப்பு இயக்கத்தில் வியத்தகு சாதனை படைத்த  குழந்தைகளையும், தன்னார் வலர்களையும் பாராட்டுகிறேன். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், இளந்தளிர் இலக்கியத் திட்டம், வகுப்பறை உற்றுநோக்குச் செயலி, கல்வி தொலைக்காட்சி ஆகியவற் றின் வரிசையில் இந்த எண்ணும்  எழுத்தும் திட்டமும் இணைந்தி ருக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மட்டுமின்றி, உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி யிலும், அறிவாற்றல், சிந்த னைத் திறத்திலும் உயர்ந்த  தமிழ்நாடாக மாறுவதற்கான திட்டங்களை செயல்படுத்து வோம். ‘படிக்காமலே சாதிக்கலாம்’ என்று சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை. இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதை யை காட்டும் சூழ்ச்சி அது. எனவே, குழந்தைகள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  பள்ளிக் கல்வித்  துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் க.  நந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.