பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்துள்ளார். இந்த நிலையில், அவர் வகித்த உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை மற்றும் கைத்தறித்துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.