tamilnadu

img

வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர் குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்துக!

பிரதமருக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கடிதம்

சென்னை, செப். 19- வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய தாரர்களின் குறைந்தபட்ச பென்சனை உயர்த்தக்கோரி  பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடாராஜன்  கடிதம் எழுதி யுள்ளார். அந்த கடிதம் வருமாறு: இ.பி.எஸ் 1995 பென்ஷனர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தங்களது  கவணத்திற்கு கொண்டுவர விரும்பு கிறேன்.  1995 ஆம் ஆண்டு நவம்பர்  16 ஆம் தேதி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இ.பி.எஸ் .1995 பென்ஷன் திட்டத்தின் மூலம் தற்போது இந்திய முழுவதும் சுமார் 64 லட்சம் பேர் பென்ஷன் பெற்று வருகின்றனர்.  அதில் 50 லட்சம் பேர் மாதந்திர பென்ஷனாக இன்றும் ரூ 1000/க்கும் கீழ்தான் பென்ஷனாக பெறுகின்றனர். மீதமுள்ள 50 சதம் பேரும் ரூ1000 லிருந்து ரூ.3000 வரை மட்டுமே பென்  ஷனாக பெறுகின்றனர். அதனால்,  இபிஎஸ் 1995 பென்ஷனர்கள் ஒட்டு மொத்தமாக  மனவேதனையுடன், இன்றைய பணவீக்க காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இ.பி.எஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டம் மற்றும் நட வடிக்கைகள் காரணமாக முன்பிருந்த  UPA அரசாங்கம் E.P.S பென்ஷ னர்களின் குறைந்தப்பட்ச பென்ஷனை  உயர்த்துவதை பரிசீலிக்க  பாஜக எம்பி பகத்சிங்கோஷரியா  தலை மையில் பாராளுமன்ற குழுவை அமைத்தது. அந்த பாராளுமன்ற குழுவும் நு.ஞ.ளு1995 திட்டத்திற்கு மத்திய அரசு தற்போது செலுத்தும் 1.1.6 விழுக்காடு பங்களிப்பை தொழி லாளர்கள் செலுத்தும் 8.33ரூ பங்க ளிப்பு போன்று  இணையாக செலுத்த வேண்டும் என்றும், இடைகால நிவா ரணமாக மாதம் தோறும் குறைந்தப் பட்ச பென்ஷனாக ரூ3000 வழங்க வேண்டும் என்று 2013ல் பரிந்துரை செய்தது. அதன் பிறகு மத்தியில் பொறுப்பேற்ற பாஜக அரசு முந்தைய  ஐமுகூ அரசு 2014 மார்சு மாதத்தில் ஒப்புதல் அளித்த குறைந்தப்பட்ச பென்ஷன் ரு1000மும்  பென்ஷனர் களை 58 வயது முடித்து பணி ஓய்வு பெற்றவர்கள் என்றும் 58 வயதிற்கு  முன்பாக பணியிலிருந்து வெளியேறி யவர்கள் என்று இருகூறாக பிரித்து  வழங்கியது.

இதனால் 25 லட்சம்  பேருக்கு மேல் இன்றும் ரூ1000திற்கும்  கீழ் பென்ஷன் பெற்று வருகின்றனர்.  இ.பி.எப்.1995 பென்ஷனர்களின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக வும், நாடாளுமனறத்தில் பாஜக உட்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பி னர்களின் தொடர் வலியுறுத்தல் காரண மாகவும், தற்போதைய அரசு 2018ல் தொழிலாளர் நலத்துறை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை (HIGHPOWER MONITERING COMMITTEE)அமைத்தது . அந்த குழுவும் 2019 ல்  E.P.S பென்ஷனர்களின் குறைந்தப் பட்ச பென்ஷனை உயர்த்த பரிந்துரை  செய்தது. மத்திய தொழிலாளர் துறை அமைச்  சரும், வருங்காலவைப்பு நிதியின்  மத்திய அறங்காவலர் குழுவும்  (C.¡õ.T), மற்றும் தொழிலாளர்துறை யின் நாடாளுமன்ற நிலைக்குழு என்று  அனைத்து குழுக்களும் E.P.S பென்ஷ னர்களின் குறைந்தப்பட்ச பென்ஷனை உயர்த்த பரிந்துரை செய்துள்ளன. இ.பி.எஸ். பென்ஷனர்களின் இந்த கோரிக்கைகளை தங்களுக்கும், மத்திய நிதி அமைசருக்கும் மதுரா தொகுதி உறுப்பினர் ஹெமமாலி  உட்பட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ள னர். இருப்பினும் இதுநாள் வரை இ.பி.எஸ். பென்ஷனர்களின் குறைந்தப்  பட்ச பென்ஷன் உயர்த்தபடவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு, இன்னும் காலம் கட்டத்தாமல் செயல்  பட்டு, இ.பி.எஸ் பென்ஷனர்களுக்கு கான குறைந்தப்பட்ச பென்ஷனை உயர்த்தி 64 லட்சம் பென்ஷனர்கள் உட்பட சுமார் இரண்டரை கோடி மக்க ளின் வாழ்க்கையின் துயரை துடைப் பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த  கடிதத்தை தங்களுக்கு எழுது கின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்  பட்டுள்ளது.