tamilnadu

10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

 சென்னை,ஜூன் 13- வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாகை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களி லும், புதுவையிலும் வரும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது