tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே கடந்த 2 தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் சற்று உற்சாகமடைந்துள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கோவை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்  ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.