சென்னை,ஜன.1- வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், கடல் காற்று கிழக்கு திசையில் இருந்து வந்து கொண்டிருப்பதால் மேலும் 4 நாட்களுக்கு பருவமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாயன்று லேசான தூறல் மழை பெய்தது. இந்நிலை யில், புதனன்று (ஜன.1) காலை 6 மணி அளவில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. பிராட்வே, எழும்பூர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, கொரட்டூர், வில்லிவாக்கம், அயனாவரம், புரசை வாக்கம், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், அடையாறு, துரைப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேட வாக்கம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்பட நகரின் பல பகுதிகளில்மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.