tamilnadu

img

மணல் கொள்ளையால் இடியும் அபாயத்தில் ரயில்வே பாலம்

கடலூர், ஜூன் 28- கட்டுமானப் பணிக்கு அத்தியாவ சிய தேவையான மணல் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்  மணல் உள்ள பகுதிகளில் தலைச் சுமையாகவும், இரண்டு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள், வாக னங்களிலும் மணல் திருட்டு நடை பெற்று வருகிறது. இதனைத் தடுக்க  மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ள போதிலும், மணல் திருட்டினை தடுக்க முடியாமல் காவல் துறை யினர் திணறி வருகின்றனர். சில இடங்களில் காவல்துறையினரின் ஒத்துழைப்போடும் இந்த மணல்  திருட்டு நடைபெறுதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடலூர் நக ருக்குள் பாயும் கெடிலம் ஆற்றில் எவ்வித சத்தமும் இல்லாமல் நடை பெற்று வரும் மணல் திருட்டினால் ரயிவே பாலம் இடிந்து விழும் அபா யம் ஏற்பட்டுள்ளது.  கடலூர் - விழுப்புரம் ரயில்  மார்க்கத்தில் கடலூர் அருகே பாதி ரிக்குப்பத்தையும் கோண்டூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றில் ரயில்வே பாலம் அமைக்கப்  பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழே  சுமார் 26 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த ஆற்றில்  தண்ணீர் இல்லாத காரணத்தால் தூண்களின் அருகே உள்ள மணலை  சிலர் அள்ளிச் செல்கின்றனர். குறிப்பாக சுரங்கம் போல் பாதை அமைத்து ரயில் பாலத்தின் அஸ்தி வாரம் வரையில் தோண்டியெடுக் கின்றனர். சாக்கு மூட்டைகளில் மணல்  அள்ளி அதனை இருசக்கர வாக னங்களில் தங்களின் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின் றனர். ஒரு மூட்டை மணல் ரூ.100 வரையில் விற்பனையாவதால் இதில் பலர் கூட்டாக இணைந்து செயலாற்றி வருகின்றனர். தற்போது பாலத்தின் அஸ்தி வாரங்கள் முழுமையாக வெளியேத் தெரியும் அளவிற்கு மணல் அள்ளப்  பட்டுள்ளதால் வரும் மழைக்காலத்  தில் வெள்ளம் வந்தால் கண்டிப்பாக  பாலம் சேதமடையும். ஏனெனில் பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆற்  றின் போக்கானது ஆங்கில எழுத்தான  எஸ் வடிவில் உள்ளது. இதனால் பாலத்தின் கீழே அதிகமான நீர் வேக மாக சுழலுடன் செல்லும். இந்த பாலத்தின் வழியாக தினசரி சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஜெ.ராஜேஷ்கண்ணன் கூறுகை யில், “ரயில் பாலத்தை காப்பாற்  றும் பொருட்டு மணல் கொள்ளை யைத் தடுப்பதோடு, பாலத்தின் அஸ்திவாரத்தையும் பலப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  மணல் கொள்ளையை தடுக்க வில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.