tamilnadu

img

தேசிய கார்பந்தய சாம்பியன்போட்டி சென்னைவீரர் ராகுல் முன்னிலை

கோவை, செப்.2 கோவையில் ஜே.கே. டயர் நடத்திய தேசிய கார் பந்தய சாம்பியன்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ராகுல் ரங்கசாமி எல்ஜிபி பார்முலா - 4 போட்டியில் 18 புள்ளிகளை எடுத்து 2வது சுற்றுக்குப் பின் 3வது சுற்றில் முதலிடம் பிடித்தார். புனேயைச் சேர்ந்த தனே கெய்க்வாட், மும்பையைச் சேர்ந்த ஆரோ ரவீந்திரா, சென்னையைச் சேர்ந்த சாய் பிரித்வி, வதோதராவைச் சேர்ந்த மிரா எர்டா மற்றும் சதாராவைச் சேர்ந்த இக்ஷான் ஷன்பாக் ஆகியோர் இன்றைய நாளின் இதர நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். அவரவர்கள் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எல்ஜிபி பார்முலா - 4 போட்டி அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் எம்ஸ்போர்ட் சோகில் ஷா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் தில்ஜித் அவரை 3வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளினார். 2வது போட்டியின் துவக்கத்தில் பி7ல் இருந்த வீரர் வேகமாகவும் நிதானமாகவும் காரை ஓட்டி முதலிடம் நோக்கிச் சென்றார். பி5 ல் இருந்த ராகுலின் முயற்சி தோல்வி அடைந்ததால் அவர் 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். எப்படியிருந்தாலும், ராகுல் இதேபோன்ற சூழ்நிலையை அன்றைய இரண்டாவது மற்றும் இறுதி எல்ஜிபி - 4 போட்டியில் பயன்படுத்தி வியத்தகு முறையில் வெற்றி பெற்றார்.  பெண்களுக்கான பிரிவில் வதோதராவைச் சேர்ந்த மிரா எர்டா தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த மீகா 45 புள்ளிகளையும், அனுஷிரியா குலாத்தி 28 புள்ளிகளையும் பெற்று அவருக்கு அடுத்தடுத்த நிலையில் இருந்தனர்.