tamilnadu

img

கதிரியக்க உதவியுடன் நவீன முடநீக்கியல் அறுவை சிகிச்சை

சென்னை, அக். 11- நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலுடன் இளைஞர்  ஒருவரின் முழங்கை எலும் பில் காணப்பட்ட  கட்டி அகற்  றப்பட்டது. குறைந்தபட்சத் துளை அறுவை சிகிச்சையால் அந்த இளைஞர் 24 மணி நேரத்தில் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பி னார். கவனம், கட்டுப்பாடு  மற்றும் துல்லிய நவீனத்து டன் கூடிய குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை தொழில்நுட்பமே இனி  எதிர்காலச் சிகிச்சை முறை யாக இருக்கும் என்று இந்த சிகிக்சையை மேற்கொண்ட சூளைமேடு எம்.ஜி.எம் மருத்துவமனையின்  முட நீக்கியல் துறைத் தலைவர் டாக்டர் ஏ பி கோவிந்தராஜ் கூறினார். ‘எலும்புத் திசுத் திரள் கட்டிக்கான சிகிச்சை கணிச மான அளவு எலும்பை அகற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை ஆகும்.  ஆனால் சிகிச்சை அளிக்க  முடியாத அளவுக்கு எலும்பு  மூட்டுப் பகுதியைக் கடுமை யாகப் பாதித்துவிடும். நோயாளி இளைஞர் என்ப தால் மேற்கூறிய வழக்கமான  அறுவை சிகிச்சைக்குப் பதி லாக மாற்று வழியை யோசித்து, இமேஜ் வழி காட்டுதல் மூலம் அகற்றும்  முறையை செய்து முடித் தோம் என்றார்.‘எலும்புத் திசுத் திரள் கட்டிக்கான மிகச்  சிறந்த சிகிச்சை முறை  சிடி  வழிகாட்டுதலுடன் குறைந்த பட்சத் துளையுடன் கூடிய  கதிரியக்கவியல் நீக்கம்  என்று மருத்துவச் சேவைகள் இணை இயக்குநர் டாக்டர் நவீன் ஞானசேகரன் மற்  றும் கதிரியக்கவியல் துறை  ஆலோசகர் டாக்டர் அருண்  குமார் நீலகண்டன் ஆகி யோர் கூறினர்.