புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கோரி கதிர்காமம் சட்டமன்ற தொகுதியில் வீதிவீதியாக பிரச்சாரம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வேட்பாளர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பெத்தபெருமாள், ரமேஷ், சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் நாரா.கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக செயலாளர் கபிரியேல் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்குகள் கேட்டு, திருவண்ணாமலை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடந்தது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நகரச் செயலாளர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.